திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் நீதிபதி வீட்டில் ஆஜர்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்ட நிலையில், அவர்கள் போலீசாரின் விசாரணைக்கு பிறகு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் நீதிபதி வீட்டில் ஆஜர்
திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநில கொள்ளையர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை திருவண்ணாமலை காவல்துறை தனிப்படை பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று கைது செய்தனர். அவர்களை ஹரியானா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர்.
ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்ட நிலையில். கொள்ளையர்களிடம் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளையர்கள் இருவரையும் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.