ஏடிஎம் மிஷினில் கொள்ளையடிக்க திருடர்கள் போட்ட திட்டம் - சிசிடிவி பார்த்து அதிர்ந்த போலீசார்

By Petchi Avudaiappan Apr 26, 2022 12:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மும்பையில் ஏடிஎம் மிஷினில் கொள்ளையடிக்க திருடர்கள் போட்ட திட்டத்தால் போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

நாடு முழுவதும்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இக்காலக்கட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் வித விதமாக அரங்கேறி வருகிறது. 

இதனிடையே ஏடிஎம் மையத்தில் பணம் கொள்ளை போனது என்ற செய்தியை பலமுறை நாம் பார்த்துள்ளோம்.  ஆனால் திருட முயற்சித்து ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்துக் கொண்ட போன திருடர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம்  சாங்க்லீ பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம்   ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து ஏடிஎம் மையத்தின் சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் லாவகமாக மர்ம நபர்கள் தகர்த்து எடுத்துக்கொண்டு போயுள்ளனர்.

இந்த சம்பவம் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.