தானியங்கி ATM மூலம் ரேஷன் பொருட்கள்
இந்தியா முழுவதும் 24 மணிநேரமும் செயல்படும் தானியங்கி ATM திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கிராம, நகரப்புறங்களில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பொருட்களை வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும், பொருட்களின் அளவு குறைவாக இருப்பதாகவும் தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தானியங்கி ATM திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
அதாவது வங்கி ATMகளில் பணம் எடுப்பது போன்று ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
ரேஷன் அட்டை அல்லது ஆதார் அட்டையை பயன்படுத்தி அடையாளத்தை உறுதி செய்த பின்னர் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இது 24 மணிநேரமும் இயங்கும் என்பதால், எந்நேரமும் பெற்றுக்கொள்ள முடியும், அதுமட்டுமின்றி சரியான அளவிலும் பெற முடியும்.
தற்போது ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் விரைவில் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
