ATMல் பணம் எடுக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பணம் திரும்ப கிடைக்குமா?
ATM இயந்திரங்கள் இன்று நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன.
பணம் எடுக்க முன்பு வங்கிகளில் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில் தற்போது ATMகளில் 24 மணி நேரமும் எளிதாக பணம் எடுக்க முடிகிறது.
அந்தவகையில், ATMல் பணம் எடுக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பணம் திரும்ப கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

பொதுவாக, ATM இயந்திரங்களில் மின்தடை ஏற்பட்டாலும் செயல்படும்படி பேக்அப் வசதி இருக்கும்.
இருப்பினும், சில நேரங்களில் பழைய இயந்திரங்களில் பணம் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் பதற்றப்பட தேவையில்லை.
Reserve Bank of India விதிகளின்படி, வங்கிகள் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்ட தொகையை வாடிக்கையாளரின் கணக்கில் திருப்பித் தர வேண்டும்.

பல நேரங்களில் 2 முதல் 4 மணி நேரத்திற்குள்ளேயே பணம் மீண்டும் வரவு வைக்கப்படுகிறது.
24 மணி நேரத்திற்குள் பணம் திரும்ப வரவில்லை என்றால், முதலில் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளிக்க வேண்டும்.
அதற்குப் பிறகும் தீர்வு கிடைக்காவிட்டால், RBI வங்கி குறைதீர்ப்பு மையத்தில் புகார் செய்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.