நான் அப்பா ஆகிட்டேன்... - இயக்குநர் அட்லீ வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு... - குஷியில் ரசிகர்கள்...!

Twitter Pregnancy Atlee Kumar
By Nandhini Dec 16, 2022 01:10 PM GMT
Report

கடந்த 8 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் அட்லீ அப்பா ஆகி இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லீ -

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். இவருடைய உதவி இயக்குநராக பணியாற்றியவர்தான் அட்லீ.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக அட்லீ பணியாற்றியுள்ளார். இதனையடுத்து, அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார்.

அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார். தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

atlee-kumar-priya-pregnancy-twitter

அட்லீ நெகிழ்ச்சி பதிவு - 

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் அட்லீ புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், எங்களின் குடும்பம் பெரிதாகிறது. நாங்கள் அப்பா அம்மா ஆகப்போகிறோம். எங்களுடைய இந்த பயணம் முழுவதற்கும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை.. வித் லவ் அட்லி, பிரியா அன்ட் பெக்கி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மனைவி பிரியாவின் பேபி பம்ப் போட்டோக்களையும் ஷேர் செய்திருக்கிறார் அட்லீ. இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், சினிமாத்துறை பிரபலங்கள் இயக்குநர் அட்லீக்கும், ப்ரியாவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.