அட்லீ - ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தைன்னு தெரியுமா? வெளியான தகவல்...!
இயக்குநர் அட்லீ -
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். இவருடைய உதவி இயக்குநராக பணியாற்றியவர்தான் அட்லீ. இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக அட்லீ பணியாற்றியுள்ளார்.
இதனையடுத்து, அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.
தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீக்கு குழந்தை பிறந்தது
சமீபத்தில், தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் அட்லீ புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், எங்களின் குடும்பம் பெரிதாகிறது. நாங்கள் அப்பா அம்மா ஆகப்போகிறோம் என்று பதிவிட்டார்.
இதனையடுத்து, ப்ரியாவிற்கு வளைகாப்பு நடந்தது. இந்த வளைகாப்பிற்கு நடிகர் விஜய் கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்நிலையில், அட்லீ மற்றும் ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் சமூகவத்தளங்களில் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர். தற்போது அட்லீக்கும், ப்ரியாவிற்கும் அவரது ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.