உன்னாலே… எந்நாளும்… என் ஜீவன் வாழுதே : மகிழ்ச்சி செய்தியை அறிவித்த அட்லீ

Atlee Kumar
By Irumporai Dec 16, 2022 09:46 AM GMT
Report

இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.  

அட்லி மனைவி கர்ப்பம்

இயக்குனர் அட்லி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு ” கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 அட்லீ அ ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் பாண் இந்திய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.