நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை

Nigeria Death Gun Shooting
By Karthikraja Jun 15, 2025 07:49 AM GMT
Report

நைஜீரியாவில் மர்ம நபர்களால் 100க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியா பொதுவாகவே வன்முறை நிறைந்த ஒரு நாடாக அறியப்படுகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் பெனுவே மாகாணத்தில் உள்ள யெலேவடா கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள், சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர்.

100 பேர் உயிரிழப்பு

இதில், அங்கு வசித்த 100க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர். மேலும், அங்கிருந்த வீடுகளை குடும்பத்துடன் பூட்டி வீட்டிற்கு தீ வைத்தனர். 

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை | Atleast 100 Peoples Death In Nigeria Gun Shoot

இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை வழங்க மருத்துவவசதி கூட இல்லை என கூறப்படுகிறது. மேலும், பலர் மாயமாகியுள்ளனர்.

இந்த பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக நிலத்தை தேடுபவர்களுக்கும், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான நிலப் பிரச்சினை மோதலாக வெடித்ததாக கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் இங்கு நடைபெற்ற மோதல்களில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.