பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை - போலீசார் உடனடி ஆக்‌ஷன் எடுக்காதது ஏன்?

Uttar Pradesh Crime Death
By Thahir Apr 18, 2023 10:07 AM GMT
Report

உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்.பி ஆன ஆதிக் அகமதுவை சுட்டு கொன்ற நிகழ்வில் போலீசார் ஸ்பாட்டில் ரியாக்ட் பண்ணவில்லை அது எதனால் என்று தற்போது பொதுமக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

உடனடி ஆக்‌ஷன் எடுக்காதது ஏன்?

கைது செய்யப்பட்ட ஆதிக் அகமதுவையும், அவரது சகோதரரையும் 3 பேர் கொண்ட கும்பல், பத்திரிகையாளர்களை போல் வேடம் போட்டுகொண்டு மொத்தம் 22 வினாடிகளில் 15 முதல் 20 முறை வரை சுட்டு கொன்றது தெரியவந்துள்ளது.

சமீப காலமாக போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு நடந்த பொழுது போலீசார் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்ற குழப்பம் தற்பொழுது எழுந்துள்ளது.

பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை - போலீசார் உடனடி ஆக்‌ஷன் எடுக்காதது ஏன்? | Atique Ahmed Was Shot Dead Police Complacency

யோசிக்க முடியவில்லை - டிஜிபி 

இதனை பற்றி போலீசாரிடம் கேட்ட பொழுது " என்ன நடக்கிறது என்றே புரியாத நிலையில் எதிர்வினையாற்றுவதை யோசிக்க முடியவில்லை" என்று கூறினர். 

இதுகுறித்து டிஜிபி ஜெயின் " உண்மையிலேயே அச்சம்பவம் மிக வேகமாக நிகழ்ந்து விட்டது இதனால் போலீசார் உடனே ரியாக்ட் செய்ய முடியவில்லை, மேலும் தொழில்முறை அடிப்படையில் பார்த்தால் துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது புத்திசாலித்தனம் கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கூறுகையில் இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி,"மூவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அந்த இரண்டு கொலைகளின் பின்னணியில் உள்ள சதியை வெளிக்கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

மேலும் அந்த வழக்கில் உள்ள ஆதாரங்களை திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கும். இதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல் இருந்திருக்கலாம்'' என்று கூறினார்.