தடகள வீராங்கனை தனலட்சுமி விளையாட 3ஆண்டுகள் தடை..!
By Thahir
தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதன் காரணமாக, அவரது தடைக்காலம், 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
தனலட்சுமிக்கு 3ஆண்டுகள் தடை
தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிக்காக முன்பே ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாக, தனலட்சுமி காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்வதில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டார்.
அதன் பிறகு அவர் மீது ஊக்கமருந்து சோதனை உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
தற்போது அவரே ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதன் காரணமாக, அவரது தடைக்காலம், 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.