கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு சுனில் ஷெட்டி கொடுத்த மாபெரும் பரிசு... - வெளியான தகவல் - வாயடைத்த ரசிகர்கள்..!

KL Rahul Marriage
By Nandhini Jan 26, 2023 10:13 AM GMT
Report

சுனில் ஷெட்டி கே.எல்.ராகுலுக்கும், அதியா ஷெட்டிக்கு திருமணத்திற்கு பரிசு கொடுத்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. சுனில் ஷெட்டியின் ஆடம்பரமான கண்டாலா பண்ணை வீட்டில் இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில நாட்களாக வைரலாகி வருகிறது.

இந்த திருமண ஜோடி பெற்ற பரிசுகள் குறித்த சமீபத்தில் பல தகவல்கள் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இத்தம்பதிகளுக்கு பாலிவுட் மற்றும் கிரிக்கெட் சமூகத்திலிருந்து ஆடம்பர பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

athiya-shetty-kl-rahul-wedding-gift-suniel-shetty

சுனில் ஷெட்டி கொடுத்த பரிசு

சுனில் ஷெட்டி, கே.எல்.ராகுலுக்கும் அவரது மகள் அதியா ஷெட்டிக்கும் ரூ.50 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம், சுனிலின் நெருங்கிய நண்பர் சல்மான் கான், அதியாவுக்கு ரூ.1.64 கோடி மதிப்புள்ள சொகுசு ஆடி காரை பரிசாக அளித்துள்ளார்.

சுனிலின் சக நடிகரும் நண்பருமான ஜாக்கி ஷெராஃப் அதியாவுக்கு சோபார்ட் வாட்ச்ஸிலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தையும், அதியாவின் நெருங்கிய நண்பரான நடிகர் அர்ஜுன் கபூர் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள வைர வளையலையும் அவருக்குப் பரிசளித்தார்.

விராட் கோலி, கே.எல் ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை வழங்கினார். எம்.எஸ். தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.

தற்போது, அத்தியா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் மும்பையில் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தத் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.