குறைந்த விலையில் கலக்க வரும் ஏத்தர் இ ஸ்கூட்டர்! விலை எவ்வளவு?
ஏதர் நிறுவனம் விரைவில் தங்களுடைய புதிய இ ஸ்கூட்டரான Ather EL01 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. ஏதர் ஸ்கூட்டர்களின் தயாரிப்புகளுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஹீரோ ஓலா நிறுவனத்திற்கு போட்டியாக ஏதர் நிறுவனம் பல்வேறு இ ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிற நிலையில், ஏதர் நிறுவனம் இந்தியாவில் புதியதாக Ather EL01 என்ற புதிய இ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த Ather EL01 ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்த ஏதர் நிறுவனம் தயாராகி வருகின்றர்.
இதன் விலை ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2 கிலோவாட் பேட்டரி முதல் 5 கிலோவாட் பேட்டரி வரையிலான பேட்டரிகள் கொண்ட வேரியண்ட்கள் அறிமுகமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஸ்கூட்டர் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட தோற்றத்தில் குடும்பங்கள் அதிகளவு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கும் முயற்ச்சியில் ஏத்தர் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றது.

சிறப்பம்சங்கள்
ஏத்தர் EL01 சந்தையில் அறிமுகமானால் Vida VX2, Bajaj Chetak C2501 உள்ளிட்ட பல்வேறு இ ஸ்கூட்டர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்ப்படுகின்றது. அதாவது தங்களது போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் அதிகளவு மைலேஜ், அதிக வேகம் மற்றும் நல்ல பிக்கப் அளிக்கும் திறன் கொண்டதாக இந்த ஏத்தர் EL01 இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
ஏதர் நிறுவனத்தின் Rizta இ ஸ்கூட்டர் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்பாக திகழ்ந்து வருகின்றது. அதைப்போலவே இந்த புதிய Ather EL01 இ ஸ்கூட்டரையும் தயாரிக்க ஏதர் நிறுவனம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.