நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று - அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே சமயம்,அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், திரையுலக பிரபலங்கள்ள என பலரும் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இளம்நடிகர் அதர்வாக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
.இது தொடர்பாக அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில்:
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.
சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன்.
— Atharvaa (@Atharvaamurali) April 17, 2021
விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்.என குறிப்பிட்டுள்ளார்.