குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து என்னை.... நடிகை பரபரப்பு பாலியல் புகார்!
இந்தி நடிகை ரத்தன் ராஜ்புத் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
ரத்தன் ராஜ்புத்
மீ டூ (Me Too) டேகின் கீழ் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பேசி வருகின்றனர். இதை தமிழகத்தில் தெரிய வைத்தது பாடகி சின்மயி தான். இவர் வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டை வைத்தார்.
தொடர்ந்து எந்த பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயியிடம் பேசினாலும் அவர்களின் அடையாளத்தை மறைத்து தொடர்ந்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் சின்மயி. இந்நிலையில் இந்தி படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்த ரத்தன் ராஜ்புத் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
பாலியல் தொல்லை
அதில் " நான் ஒரு படத்தின் ஆடிஷனுக்காக ஓஷிவாரா என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். என்னுடன் எனது ஆண் நண்பர் வந்திருந்தார். நான் அங்கு நன்றாக நடித்து காட்டியதற்காக இயக்குநர் எனக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அதன் பின் குடிப்பதற்காக எனக்கு குளிர்பானம் கொடுத்தார்.
அதை குடித்ததும் நான் அசவுகரியமாக உணர்ந்தேன். அப்போதுதான் அதில் போதைப் பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என எனக்கு தெரிய வந்தது. பின்னர் என்னை வேறொரு அறைக்கு அழைத்து சென்றனர். அந்த இடத்தில் வெளிச்சம் மோசமாக இருந்தது. அங்கு ஒரு பெண் போதையில் படுத்து கிடந்தார். அந்த அறையின் எல்லா பக்கங்களிலும் துணிகள் வீசப்பட்டு கிடந்தன.
அப்போது அங்கிருந்த ஒரு நபர் வந்து எதற்காக ஆண் நண்பரையெல்லாம் உடன் அழைத்து வருகிறீர்கள்? என்று கத்தினான். ஏதோ தவறாக நடக்கிறது என்று உணர்ந்து அங்கிருந்து நான் தப்பி ஓடி வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பாகி வருகிறது.

விடுதலைப்புலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது..! கே. பி - கோட்டா டீல்: அம்பலப்படுத்தும் பொன்சேகா IBC Tamil

வெளிநாடுகளில் வைப்பிலிட்டு கோடிகளில் புரளும் டக்ளஸ்: அம்பலப்படுத்திய ஈபிடிபியின் முக்கிய புள்ளி IBC Tamil
