5 ரூபாய்க்கு பருப்பு, சாதம், சப்பாத்தி; 100 இடங்களில்.. எங்கு தெரியுமா?

Delhi Government Of India
By Sumathi Dec 26, 2025 02:11 PM GMT
Report

டெல்லி அரசு 'அடல் கேண்டீன்' திட்டத்தை தொடங்கி, நகரின் 100 இடங்களில் வெறும் 5 ரூபாய்க்கு சத்தான உணவை வழங்க முன்வந்துள்ளது.

அடல் கேண்டீன்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி முதல்வர் ரேகா குப்தா இந்த 100 அடல் கேண்டீன்களை திறந்து வைத்தார்.

5 ரூபாய்க்கு பருப்பு, சாதம், சப்பாத்தி; 100 இடங்களில்.. எங்கு தெரியுமா? | Atal Canteen Delhi Govt Launch Meals At Just Rs 5

ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கண்ணியமான முறையில் உணவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

எப்படி இயங்கும்?

ஆர்.கே.புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ், ரஜோரி கார்டன், நரேலா, பவானா உள்ளிட்ட 45 இடங்களில் முதற்கட்டமாக இந்த உணவகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. மீதமுள்ள 55 கேண்டீன்கள் வரும் நாட்களில் திறக்கப்படும்.

நோயாளியை மோசமாக தாக்கிய மருத்துவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நோயாளியை மோசமாக தாக்கிய மருத்துவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

மதிய உணவு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு உணவு மாலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் சுமார் 500 பேருக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் டிஜிட்டல் தளம் மூலம், அனைத்து மையங்களும் சிசிடிவி கேமராக்கள் வாயிலாக நேரலையில் கண்காணிக்கப்படும்.