உலகின் மிக வறண்ட அட்டகாமா பாலைவனத்தில் பூத்து குலுங்கிய பூக்கள்
அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்று.
சுமார் 1000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசுபிக் கடற்கரையோர பகுதியில் நீண்டுள்ளது.
இந்த பாலைவனம் உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்த பாலைவனம் தீவிர வறட்சி காரணமாக நாசா போன்ற விண்வெளி நிறுவனங்களால் செவ்வாய் கிரகத்தில் இயக்கப்படும் ரோவர்களுக்கான பரிசோதனை தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பூமியின் மிக வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனம், தற்போது பூஞ்சோலையாக மாறியுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக வெறும் 2 மிமீ மட்டுமே மழையைப் பெறும் இந்த வறண்ட பகுதியில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக மண்ணில் ஈரப்பதம் அதிகரித்தது.
இதில் 200க்கும் மேற்பட்ட தாவர வகைகள் மலர்ந்துள்ளன. இவற்றில் சில மலர்கள் உலகிலேயே வேறு எங்கும் வளராதவை ஆகும்.
இந்த அதிசயத்தைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளுள் அங்கு குவிந்து வருகின்றனர்.