ஒவ்வொரு முறையும் அஸ்வின்தான் பலிகிடா ஆக வேண்டுமா? - ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்!

ashwin fanstwitter England vs India
By Irumporai Aug 04, 2021 11:13 AM GMT
Report

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகின்றன.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் இன்று புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் சேர்க்கபடாமல் உள்ளார், ஜடேஜா ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் என 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் அஸ்வின் சேர்க்கப்பட்டதற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பாக கடந்த ஆட்டத்தின்போது அஸ்வின்6 விக்கெட்டுகளை வீழ்த்தியதைக் குறிப்பிட்டு விமரிசித்து வருகின்றனர்.

மேலும்  இதற்கு முன்பு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் விளையாடும்போது ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழலில் அஸ்வினுக்குப் பதில் ஜடேஜாவையே இந்திய அணி தேர்வு செய்திருந்தது ஆகவே ஒவ்வொரு முறையும் அஸ்விந்தான் பலிகிடா ஆக வேண்டுமா என ரசிகர்கள் கோபமான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்