இந்த யோகம் இருக்கா... நிச்சயம் கிடைக்கப்போகும் அதிர்ஷ்ட ஜாக்பாட்... - ஜோதிடர் ராஜேந்திரன் பேட்டி...!

IBC Tamil
By Nandhini Mar 01, 2023 01:01 PM GMT
Report

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் நீங்களும் நாட்டை ஆளலாம் என்று பிரபல ஜோதிடர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய நேர்காணலில் பேசும்போது,

யோகங்களும், தோஷங்களும் நிறைந்ததுதான் ஜாதகம். நேர்மறை, எதிர்மறை இருந்தால்தான் இயக்கம் ஆரம்பிக்கும். ஜாதகம் என்று பார்த்தால் எல்லோருக்கும் தோஷம் இருக்கும். எல்லோருக்கும் யோகம் இருக்கும். இவை இரண்டும் இல்லையென்றால் நாம் மனித பிறவி எடுக்க முடியாது.

ஒரு கட்டத்தில் 12 ராசிகள் உள்ளன. இந்த 12 ராசிகளில் வெவ்வேறு கிரணங்கள் சேரும்போது, ஒரு கிரகமும், இன்னொரு கிரகமும் சேரும்போதுதான் யோகம், தோஷம் ஏற்படும்.

ஜாதகத்தை பொருத்தவரை யோகம், தோஷத்தை பிரித்து பார்க்க முடியாது. பொதுவாக பார்த்தால் எல்லா ஜாதகத்திலும் கண்டிப்பாக தோஷம் இருக்கும்.

ibc bakthi - Dr.rajendran - astrology

சிவராஜ யோகம்

ஜாதகத்தில் 3,4 யோகங்கள் மிகச்சிறந்த யோகங்கள். சிவராஜயோகம், குருமங்கள யோகம், நிஷ்கலையோகம் இந்த 3 யோகங்கள் முக்கியமான யோகங்கள். இந்த 3 யோகங்கள் யார் ஜாதகத்தில் உள்ளதோ அவர்கள் இறக்கும் வரை எதாவது ஒன்றில் வெற்றி பெற்று விடுவார்கள்.

சிவராஜயோகம் தலையாய யோகம். சிவராஜயோகம் இருப்பவர்கள் மிகப்பெரிய கோவில்கள் கட்டுவார்கள். குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டால் அது சிவராஜயோகம். குருவோடு, சூரியன் சேர்ந்து இருந்தாலும், சூரியன், குரு சம்பந்தப்படுகிற தொடர்பு பார்வையோ, சேர்க்கையோ 6, 8, 12ம் இடம் மறைவிடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்.

மறைவிடங்களில் இல்லாமல் இருந்தால் தான் சிவராஜயோகம் வேலை செய்யும். சூரியனோடு, சனி, ராகு, கேது சேர்ந்தால் இந்த சிவராஜயோகம் வேலை செய்யாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு சிவராஜயோகம் தான்.

குருமங்கள யோகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு குரு மங்கள யோகம் இருக்கும். குருவும், செவ்வாயும் சேர்ந்தால் குரு மங்களம் யோகம் என்று சொல்வார்கள். நிஷ்கலையோகம் நிஷ்கலையோகம் என்ற ஒரு யோகம் உள்ளது.

நிஷ்கலையோகம்

என்றால் புதையல் யோகம். திடீரென்று அடிக்கும் யோகம் தான் நிஷ்கலையோகம். இந்த மூன்று யோகங்களில் யாராவது ஒருவருக்கு ஒரு யோகம் இருந்தால் அவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள்.