இந்த ராசிகாரர்கள் இதெல்லாம் செய்தால் நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்... - ஜோதிடர் ஹரீஷ் பேட்டி
இந்த ராசிகாரர்கள் இதெல்லாம் இருந்தால் நிச்சயம் அரசு வேலை கிடைக்கும் என்று ஜோதிடர் Dr.Harish நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
அரசு வேலை கிடைக்கக்கூடிய ராசிக்காரர்கள்
அரசு வேலை 3 வகைப்படும். 1,5,9 என்று சொல்லக்கூடிய ஸ்தானங்கள். அதாவது மேஷம், சிம்மம், தனுஷ் இந்த ராசிக்குரியவர்களுக்கு இயல்பாகவே அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளது. சூரியனுடைய நட்சத்திரம் சொல்லக்கூடிய கிருத்திகை, அதற்கு பிறகு உத்திரம், இதன் பிறகு உத்திராடம். 3 நட்சத்திரங்களும் இந்த ராசியில் இருப்பதனால் இந்த ராசிக்குரியவர்கள் அரசு வேலையில் இருப்பார்கள்.
லக்ணமாக இருந்தாலும் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆளுமை செய்யக்கூடிய தன்மை எந்த ராசிக்கென்றால் ஒன்று சிம்மம், இன்னொன்று விருட்சகம். இந்த இரண்டிற்கும் பயங்கரமாக இருக்கும். சிம்மம் 5ம் பாகத்திற்குரிய கலை, இலக்கியம், அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நுட்பமாக இருக்கும். விருச்சிகத்திற்கு பொருத்தவரை 10ம் இடத்தில் சூரியன் இருப்பதால் அரசு வேலைகள் சாதாரணமாகவே கிடைத்துவிடும்.
இந்த ராசிக்காரர்கள் நான் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன். கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று வில்வத்தில் அர்ச்சனை செய்தால் நிச்சயமாக கிடைக்கும். எப்பவரைக்கும் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ அதுவரைக்கும் இதை செய்யுங்கள். நிச்சயமாக வெற்றி தான்.
தோஷங்கள் பரிகார நிவர்த்தி -
குறிப்பாக, ராகு தோஷம், செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மற்றும் 1.30 மணிக்குள் பிள்ளையார்கோவில் உள்ள ஆலமரம் மற்றும் அரச மரம் அதற்கு கீழ் நாகங்கள் இருக்கும். அங்கே சென்று நீங்கள் அபிஷேகம் செய்து 5 பேருக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.
இந்த தானங்கள் செய்யும்போது ராகு,கேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செவ்வாய்தோஷம் பொருத்தவரை செவ்வாய்தோஷம் அடங்குவது ரொம்ப கஷ்டம். ஒரு பெண்ணோட ஜாதகம் அந்த பையனுக்கு பொருந்துதா என்று பார்க்க வேண்டும். பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளக்கூடிய பையன் அடங்கிப்போகிறவனாக இருந்தால் ரொம்ப சுலபம்.
செவ்வாய்தோஷத்தில் இறப்புகள் ரொம்ப கொஞ்சம்தான். மாமனாரின் ஜாதகமோ, வரக்கூடிய மருமகளின் ஜாதகமோ இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தால் அப்போதான் இந்த மாரியான விஷயங்கள் நடக்கும். பெண்கள் செவ்வாய்கிழமையில் முருகன் கோவிலுக்குச் சென்று, பசுநெய் தானம் செய்து வர வேண்டும்.
வீடு வாங்கும் யோகம்
கேந்திரங்கள் என்று சொல்வது மேஷம். அது முதல் விஷயம். அதன் பிறகு கடகம், துலாம், மகரம் இவர்களெல்லாம் இயல்பாகவே வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்கும். மேஷத்திற்கு எதிராக விருச்சிகம் இருக்கும். விருச்சிகம் எது செய்தாலும், திடீரென்றுதான் செய்வார்கள். அவர்கள் ரோபோ மாதிரி. அவர்கள் எப்போ சிந்திக்கிறார்களோ அதுதான். அவர்களுக்கு இயல்பாக வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்கும்.
வீடு கட்டவோ, கோயில் கட்ட ஆசைப்படுகிறவர்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் நன்றாக இருக்கிறதோ அந்த கிரகத்தோடு வீரியத்தை செக் செய்து விட்டு செங்கல்கள் கொண்டு போய் தானம் செய்து வர வேண்டும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.