ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சென்ற புகைப்படம்

astrology
By Nandhini Dec 14, 2021 02:04 AM GMT
Report

 பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மறுநாள் 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று 13ம் தேதி நம்பெருமாள், மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தரருளினார்.

வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று டிசம்பர் 14ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சொர்க்கவாசலுக்கு புறப்பட்டார். இன்று சரியாக காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அரங்கநாதர் திருக்கோயில் வைகுண்டஏகாதசி திருவிழாவில் அறநிலையத்துறை துறை அமைச்சர் சேகர்பாபு , வேலூர் அணைக்கட்டு தொகுதி திரு நந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் வருகை தந்தனர். 

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சென்ற புகைப்படம் | Astrology