இன்றைய ராசிபலன் (25.11.2021)
மேஷம்
எதிர்ப்புகள் அடங்கும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
ரிஷபம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
கடகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களைச் சீண்டிப் பார்ப்பார்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
சிம்மம்
உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
கன்னி
ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
துலாம்
தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை நம்பி சில பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
தனுசு
சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
மகரம்
உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
மீனம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.