இன்றைய ராசிபலன் (03.11.2021)
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
மிதுனம்
எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
கடகம்
உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.
சிம்மம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க பாருங்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
துலாம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள்.
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
தனுசு
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.
மகரம்
கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கும்பம்
சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.
மீனம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.