இன்றைய ராசிபலன்
மேஷம்
புதிய திட்டங்கள் நிறை வேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை நிர்வாகத்தினரிடம் வெளிப்படுத்துவீர்கள்.
ரிஷபம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
மிதுனம்
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
கடகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
கன்னி
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
விருச்சிகம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலருக்கு மனசுமாறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
மகரம்
சந்திராஷ்டமம் இருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள்வந்து போகும்.
கும்பம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.
மீனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.