இன்றைய ராசிபலன்

astrology
By Nandhini Oct 31, 2021 03:00 AM GMT
Report

மேஷம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

ரிஷபம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.

மிதுனம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள்.

துலாம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

விருச்சிகம்

உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். 

தனுசு

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும்.

கும்பம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.