இன்றைய ராசி பலன்கள் (27.10.2021)

astrology
By Nandhini Oct 27, 2021 03:09 AM GMT
Report

மேஷம்

விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.

கடகம்

வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

சிம்மம்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.

கன்னி

பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

துலாம்

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி அமைதி அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழையசரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.

தனுசு

ஆடை ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள்.

மகரம்

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

கும்பம்

சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் சலுகைகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

மீனம்

தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.