இன்றைய ராசிபலன் (25.10.2021)

astrology
By Nandhini Oct 25, 2021 02:34 AM GMT
Report

மேஷம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மிதுனம்

குடும்பத்தில் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர் நண்பர் உடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள்.

கடகம்

அனுபவப் பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சில சூட்சமங்களை சொல்லித்தருவார்.

கன்னி

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகும், இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள்.

விருச்சிகம்

பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் கிடைக்கும்.

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மகரம்

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

கும்பம்

பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் மதிப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.

மீனம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.