இன்றைய ராசிபலன்

astrology
By Nandhini Oct 24, 2021 02:15 AM GMT
Report

மேஷம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய சில அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள்.

மிதுனம்

சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்

உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.

கன்னி

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

விருச்சிகம்

விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதித்துப் பேசுவார்கள்.

தனுசு

உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

மகரம்

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

கும்பம்

கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.