‘மகாபாரதம் - 2’ சகுனி யார்? ஏன் பழிவாங்க துடித்தார்? உண்மையில் சகுனி நல்லவரா? இதோ -

astrology
By Nandhini Oct 22, 2021 08:23 AM GMT
Report

மகாபாரதக் கதை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும், மகாபாரத கதையில் சகுனியின் பெயர் பெரிதாக பேசப்படுகிறது. ஏனென்றால், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் நின்று விளையாடியவர் இந்த சகுனி தான்.

இன்னும் சொல்லப்போனால் மகாபாரதக்கதையே சகுனியால் வழிநடத்திச் செல்லப்பட்டது என்று சொல்லலாம். ஒருவேளை சகுனி இல்லாமல் இருந்திருந்தால் குருஷேத்திர போர் வந்திருக்காது. பாண்டவர்கள் சூது விளையாடி இருக்க மாட்டார்கள். அவர்களே ஆட்சி செய்து வந்திருக்கலாம். துரியோதனன் மனதில் வேறு யாரும் அவ்வளவு வஞ்சனை எண்ணத்தை விதைத்திருக்க மாட்டார்கள்.

சகுனி யார்? ஏன் பழிவாங்க துடித்தார்? உண்மையில் சகுனி நல்லவரா? என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் அலசுவோம் -

சகுனியின் தந்தை சுலபன், காந்தாரி சகுனியின் சகோதரி. காந்தாரியை கல்யாணம் செய்து கொடுக்கும் போது, காந்தாரிக்கு ஜாதகத்தில் ஒரு தோஷம் இருந்தது. அதனால், காந்தாரியை ஒரு வெள்ளாட்டுக்கு கல்யாணம் செய்து கொடுத்து, அந்த ஆட்டை பலி கொடுத்தார் தந்தையான சுலபன்.

காந்தாரியை திருதராஷ்டரனுக்கு பொண்ணு கேட்டு வந்தார் பீஷ்மர். திருதராஷ்ட்ரன் ஒரு குருடர். ஆதலால் காந்தாரியை திருதராஷ்ட்ரனுக்கு மணம் செய்து வைக்க சுலபன் மறுத்தார். ஆனால், பீஷ்மர் மேல் இருந்த பயத்தால் காந்தாரியை திருதராஷ்ட்ரனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டார்.

அழகும், வீரமும் கொண்ட தன் மகளை ஒரு குருடனுக்கு மணம் செய்து கொடுக்க இருக்கிறோமோ என்று எண்ணி மனம் கலங்கினார் சுலபன். இதை அறிந்த காந்தாரி ஒன்றும் சொல்லாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து திருதராஷ்ட்ரனை திருமணம் செய்து கொண்டாள்.

பிறகு, காந்தாரிக்கும், ஆட்டிற்கும் திருமணம் செய்து வைத்த விஷயம் பீஷ்மருக்கு தெரியவருகிறது. இதனால் கொதித்தெழுகிறார் பீஷ்மர். ஆடாகவே இருந்தாலும், அது பலியானதால் காந்தாரி ஓர் விதவை தானே? ஓர் விதவையை என் குலத்தில் கட்டி வைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசும் என்று பொங்கியெழுந்த பீஷ்மர். சுலபனின் எந்த ஒரு விளக்கத்தையும் பீஷ்மர் கேட்கவில்லை.

இதனால், "தான் ஏமாற்றப்பட்டோம்" என்று நினைத்த திருதராஷ்ட்ரன், சுபாலரையும், உறவினர்கள் 100 பேரையும் சிறையில் போட்டு தண்டித்தார். சிறையில் கொடுக்கும் ஒரு கைப்பிடி சோற்றை யார் சாப்பிட்டு உயிர் பிழைக்கிறார்களோ அவர்களே விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறி விட்டு பீஷ்மர் சென்று விட்டார். பீஷ்மர் தன்னுடைய பலத்தால் சகுனியின் உறவினர்கள் 100 பேருக்கும் ஒரு கைப்பிடி உணவையே சிறையில் கொடுத்தார்.

பசியின் கொடுமை தாங்க முடியாமல் அந்த ஒரு கைப்பிடி சோற்றுக்கு அனைவரும் அடித்துக் கொண்டார்கள். அந்த ஒரு கைப்பிடி சோறு யாருக்கும் போதவில்லை. பசியின் கொடுமை நாளுக்கு நாள் அவர்களுக்கு அதிகரித்ததால், ஒருவர் ஒருவராய் தினமும் இறந்து போனார்கள். தன்னுடைய உறவினர்கள் தன் கண் முன்னே துடிதுடித்து இறந்து போவதை சகுனி கண்டு அழுதான்.. துடித்தான்... அப்போது, கூட்டத்தில் ஒரு மனதாக ஒரு முடிவு எடுத்தார்கள்.

சிறையில் ஒரு கைப்பிடி உணவை சகுனிக்கே தந்து உயிர் பிழைக்க முடிவு செய்தார்கள். சகுனிக்கு அனைவரும் மொத்த உணவையும் கொடுத்து அவனை பிழைக்க வைத்தனர். அனைவரும் ஒவ்வொருவராக சிறையில் இறந்து போனார்கள்.

"பீஷ்மரை வீரத்தால் வெல்ல இயலாது. வஞ்சனையால் மட்டுமே கொல்ல வேண்டும். பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடுக்க வேண்டும். அந்த புத்திசாலித்தனம் சகுனிக்கு மட்டுமே இருந்ததால் அனைவரும் அவனிடம் வேண்டினார்கள்.

கடைசியில் சுலபன் இறக்கும் தருவாயில், சகுனியை அழைத்தார் சுலபன், 'மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அனாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்க வேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்க வேண்டும் என்று கூறி தன் கைகளை சகுனியின் முன்பு நீட்டினார் சுலபன்.

என் கை விரல்களை வெட்டு சகுனி என்று கூறினார். தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.

நிர்மூலமாக்கு உன் எதிரிகளை. இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இது தான் பொருளாக இருக்க வேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும், அந்த எண்ணாக நான் வந்து விழுவேன்.

தன் உயிர் தன்னை விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டு மொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன். தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி. பிறகு, கத்தியை எடுத்து தன்னுடைய தந்தையின் விரல்களை வெட்டினான் சகுனி.

தந்தையோ வலி தாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி அமர்ந்து இருந்தார். கண் திறந்தான் சுபலன், எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவது தான் உன் திறமை. எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டு விடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வது தான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்றான் சுபலன்.

மகனே! அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே சுபலனின் உயிர் உடலை விட்டு பிரிந்தது. தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின் காதுகளிலும் கேட்டது. அதனால் கடைசியாக தன்னை மட்டும் உயிருடன் விடுமாறு சகுனி பீஷ்மரிடம் வேண்டினான். பீஷ்மரும் அவனை விடுவித்தார். இதற்கு பழிவாங்கவே சகுனி காந்தாரி மூலமாக அவர்களோடு உறவினராகி அவர்களை வேரறுத்தான்.   

‘மகாபாரதம் - 2’ சகுனி யார்? ஏன் பழிவாங்க துடித்தார்? உண்மையில் சகுனி நல்லவரா? இதோ - | Astrology