இன்றைய ராசிபலன் (22.10.2021)

astrology
By Nandhini Oct 22, 2021 03:43 AM GMT
Report

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள்.

ரிஷபம்

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

மிதுனம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள்.

கடகம்

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

சிம்மம்

சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.

கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வ தால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப் பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம்.

துலாம்

எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள்.

விருச்சிகம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

தனுசு

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள்.

மகரம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

கும்பம்

குடும்பத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு.