இன்றைய ராசிபலன் (12.10.2021)

astrology
By Nandhini Oct 12, 2021 04:09 AM GMT
Report

மேஷம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

சிம்மம்

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

கன்னி

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

துலாம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

விருச்சிகம்

கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.

கும்பம்

குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்து கொள்ள தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.