இன்றைய ராசிபலன் (11.10.2021)

astrology
By Nandhini Oct 11, 2021 03:36 AM GMT
Report

மேஷம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உடல்நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.

ரிஷபம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும்.

மிதுனம்

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

கடகம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

சிம்மம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.

கன்னி

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

துலாம்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ராஜதந்திரத்தை அதிகரிப்பீர்கள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாத படி வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும்.

தனுசு

பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.

மகரம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

கும்பம்

மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.