இன்றைய ராசிபலன் (08.10.2021)

astrology
By Nandhini Oct 08, 2021 03:41 AM GMT
Report

மேஷம்

மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்

உறவினர் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

மிதுனம்

உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

கடகம்

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.

சிம்மம்

விருந்தினர் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னி

நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

விருச்சிகம்

மறைமுக விமர்சனம் தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

தனுசு

பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மகரம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கும்பம்

வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.