இன்றைய ராசிபலன்

astrology
By Nandhini Oct 07, 2021 04:54 AM GMT
Report

மேஷம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.

ரிஷபம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

மிதுனம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

கடகம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

சிம்மம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களை சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.

கன்னி

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.

விருச்சிகம்

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

தனுசு

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மகரம்

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள்.பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.

மீனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம்.