இன்றைய ராசிபலன் (06.10.2021)

astrology
By Nandhini Oct 06, 2021 03:14 AM GMT
Report

மேஷம்

எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.

ரிஷபம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். 

மிதுனம்

அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

கடகம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.

சிம்மம்

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரியிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

துலாம்

எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும்.

விருச்சிகம்

கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

தனுசு

சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி உருவாகும். உறவினர்கள் உதவுவர். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மீனம்

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.