இன்றைய ராசி பலன்கள் (05.10.2021)

astrology
By Nandhini Oct 05, 2021 05:00 AM GMT
Report

மேஷம்

அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

ரிஷபம்

ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

மிதுனம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு உயரும்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.

துலாம்

சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

விருச்சிகம்

எதையும் தாங்கும் மன வலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்பு கூடும் நாள்.

தனுசு

தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.

மகரம்

உங்கள் சூழ்நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும்.

மீனம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.