இன்றைய ராசி பலன்கள் (04.10.2021)

astrology
By Nandhini Oct 04, 2021 05:39 AM GMT
Report

மேஷம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

ரிஷபம்

பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.

மிதுனம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிரச்சினைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கன்னி

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய நாள். 

துலாம்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்

உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப் பதால் இனம் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். கவனம் தேவைப் படும் நாள்.

கும்பம்

பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். திடீரென்று அறிமுக மாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.