இன்றைய ராசிபலன் (03.10.2021)

By Nandhini Oct 03, 2021 02:45 AM GMT
Report

மேஷம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வேற்று மதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் அன்னினேன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சினை வரக்கூடும்.

துலாம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

விருச்சிகம்

தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

தனுசு

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள் மனக்கலக்கங்கள் வந்து போகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவும் பழகவும் வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

மீனம்

மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் முடிந்ததை செய்து முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்களால் உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.