இன்றைய ராசி பலன்கள் (02.10.2021)

astrology
By Nandhini Oct 02, 2021 03:47 AM GMT
Report

இன்றைய ராசி பலன்கள் (02.10.2021) 

மேஷம்

புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது இன்றைய நாளை சாதகமானதாக மாற்ற உதவும். வேலை சூழல் வளர்ச்சி மிகுந்ததாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும்.

ரிஷபம்

முயற்சிகள் வெற்றிபெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்ப சுற்றுலா மேற்கொள்வீர்கள். உரிய அங்கீகாரம், பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். மன உளைச்சல் ஏற்படலாம். வேலையை முடிக்க முடியாத அளவுக்கு அழுத்தம் காணப்படும். குடும்பத்தில் உகந்த சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே அமைதி நிலவ அனுசரித்து நடப்பது நல்லது.

கடகம்

வாய்ப்புகள் பறிபோகும் நாளாக இருக்கும். மனக் கவலை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் கெடலாம்.

சிம்மம்

அணுகுமுறையில் மாற்றம் செய்வதன் மூலம் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் தகவல் தொடர்பில் பிரச்னை ஏற்படும். இதனால் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையலாம்.

கன்னி

அபாரமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவுடன் பழகுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

துலாம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எளிதில் இலக்குகளை அடையலாம். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறையைக் கையாள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறலாம். மன உணர்ச்சிகளை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படிச் செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் வெறுப்புணர்வுடன் நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். அனுசரித்து நடப்பது அமைதியைத் தக்க வைக்க உதவும்.

மகரம்

அமைதியான நாளாக இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும். விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய நாளாக இருக்கும். மன அமைதி குறைந்து காணப்படும். வேலையில் ஏமாற்றமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.