இன்றைய ராசி பலன்கன் (28.09.2021)

astrology
By Nandhini Sep 28, 2021 04:15 AM GMT
Report

மேஷம்

சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறையைக் கொண்டிருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தம் மறையும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

வளர்ச்சி குறைந்து காணப்படும். மந்தமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

மிதுனம்

குழப்பமான நாளாக இருக்கும். மனதில் அமைதி குறைந்து காணப்படும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம்.

கடகம்

அதீத உணர்ச்சிப் பெருக்கான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் மன வருத்தமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும்.

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி, உற்சாகத்துடன் இருப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும்.

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் குறைந்து காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிக்கும்.

துலாம்

இன்று நிதானமாக இருந்து செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதை ஒத்தி வையுங்கள். தடைகள், கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம்.

விருச்சிகம்

கடினமான நாளாக இருக்கும். மனதில் பயம், பதற்றமான உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம்.

தனுசு

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்

இன்று மிகவும் நிதானத்துடன் திட்டமிட்டு செயல்படுவீர்கள். சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

கும்பம்

சவாலான நாளாக இருக்கும். பிரச்னைகளை எதிர்கொள்ள நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும்.

மீனம்

சிக்கலான நாளாக இருக்கும். வளர்ச்சி தடைபடலாம். ஏமாற்றங்கள் காணப்படும். மனம் தளரக் கூடாது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுமுக உறவு பாதிக்கப்படலாம்.