இன்றைய ராசி பலன்கள் (27.09.2021)

astrology
By Nandhini Sep 27, 2021 03:19 AM GMT
Report

மேஷம்

சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை மகிழ்ச்சியானதாக மாற்றலாம்.குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். 

ரிஷபம்

விட்டுக்கொடுத்துச் செயல்படுவதன் மூலம் இன்றைய நாள் சாதகமானதாக மாறும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தில் அமைதியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பண இழப்பு ஏற்படலாம்.

மிதுனம்

யதார்த்தமான அணுகுமுறை மிகவும் முக்கியம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்

அமைதியான சௌகரியமான நாளாக இருக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத்தைச் சேமிக்கும் சூழல் ஏற்படும்.

சிம்மம்

சிறப்பான நாளாக இருக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும்.

கன்னி

மகிழ்ச்சியான ஆற்றல் மிக்க நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஈகோ பிரச்னை எழலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

சுமாரான நாளாக இருக்கும். மன அமைதி பெற ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

விருச்சிகம்

துடிப்பான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். முயற்சிகள் செய்து கடின வேலையையும் முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

தனுசு

எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கலாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

மகரம்

பயன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுப்பது அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.

கும்பம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண இழப்பு ஏற்படலாம்.

மீனம்

இனிமையான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.