இன்றைய ராசி பலன்கள் (15.09.2021)

1 week ago

மேஷம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவ மகிழ்ச்சியான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

ரிஷபம்

பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் அகந்தை போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.

மிதுனம்

சமநோக்கு நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.

கடகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மனத் தெளிவை பெறலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ நம்பிக்கையான அணுகுமுறை தேவை.

கன்னி

இன்று சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். மன உறுதி, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நற்பலன்கள் கிடைக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவ அமைதி காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே மோதலை தவிர்க்க பேசும் போது கவனமாக பேச வேண்டும்.

தனுசு

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதலை தவிர்க்க மனம் விட்டு பேசுவது நல்லது.

மகரம்

அமைதியின்மை காணப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் பிரச்னை காணப்படும்.

கும்பம்

செழிப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மீனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். இன்றைய நாளை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்