இன்றைய ராசி பலன்கள் (12.09.2021)

astrology
By Nandhini Sep 12, 2021 05:07 AM GMT
Report

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இன்று நிறைய நன்மைகளைப் பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் பலம் பெற அக்கறை செலுத்துங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் இன்று நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய பலரையும் ஆச்சரியப்பட வைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளி நபர்களுடைய நன்மதிப்பு கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதிலும் வெற்றி காண கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்துடன் இறை வழிபாடுகளில் ஈடுபடும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்த நீங்கள் இன்று தொட்டதெல்லாம் துலங்க கூடிய வகையில் அமைப்பு உள்ளது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்ப பிரச்சனைகள் தீர விட்டு கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மூன்றாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து பின் முடிவு எடுப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். ஆரோக்கியம் கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்த நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நடக்கும் கருத்து வேறுபாடுகளை விடுத்து அமைதி காப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளால் பணிச்சுமை கூடும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதையும் துணிச்சலுடன் செய்யும் தைரியம் பிறக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்த நீங்கள் இன்று சிந்திக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி காண கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மகரம்:

மகர ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதிலும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனைவிவழி உறவினர்கள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்த நீங்கள் இன்று பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சி கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுபவ பூர்வ நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு இன்முகத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லம் தேடி புதிய செய்திகள் வந்து சேரும்.