இன்றைய ராசி பலன்கள் (08.09.2021)

astrology
By Nandhini Sep 08, 2021 05:32 AM GMT
Report

மேஷம்:

மேஷராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் தைரியமாக செயல்படப் போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிந்தனையிலேயே இருப்பீர்கள். கொஞ்சம் மந்தமான சூழ்நிலை தான் நிலவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கப்போகின்றது. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவிடுவீர்கள். சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சியில் இருந்த தடை விலகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கப் போகின்றது. மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் வந்து கொஞ்சம் தொல்லை கொடுக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் இன்றைய நாள் எவ்வளவு தான் உழைத்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க போவது கிடையாது. உங்களுடைய கடமையிலிருந்து தவறாதீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகும் நாளாக இருக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு காரியத்தையும் அவசர அவசரமாக தொடங்கக் கூடாது. பொறுமையோடு செயல்பட்டால் இன்றைய நாள் உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் செல்லும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒரு பிரச்சினைக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் இன்றைய நாள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சாதகமாக அமையாது. வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கும். பொறுமையோடு இருங்கள் இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவுகரியமான நாளாக அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்திலும் பெரியதாக பிரச்சனை இருக்காது. சொல்லப்போனால் ராஜயோகம் தான் இன்றைக்கு உங்களுக்கு.