இன்றைய ராசி பலன்கள் (23.8.2021)

astrology
By Nandhini Aug 23, 2021 07:51 AM GMT
Report

மேஷம்

சிறப்பான நாளாக இருக்கும். லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

மிதுனம்

ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வேலை கடுமையாக இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம்.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். முரண்பட்டு நிற்காமல் விட்டுக்கொடுத்து, அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னி

சாதகமான சூழல் காணப்படும். உற்சாகம் அதிகரிக்கும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.

துலாம்

மந்தமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும்.வார்த்தை பிரயோகம் காரணமாக குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.

விருச்சிகம்

சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். சவாலான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் அமைதியின்மையை வெளிப்படுத்த வேண்டாம்.

தனுசு

நன்மை விளையும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.

மகரம்

சீரான நாளாக இருக்கும். விவேகத்துடன் செயல்படுங்கள். வேலை சூழல் சுமாராக இருக்கும். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.

கும்பம்

தடைகள் நிறைந்து காணப்படும். மன வருத்தம், பதற்றம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சுமுக உறவு பாதிக்கப்படலாம்.

மீனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். மனதில் ஏற்படும் பதற்றம், பயம் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகளும் அதிகரிக்கும்.