இன்றைய ராசிப்பலன்கள் - (21.08.2021)
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து தானாகவே விலகிவிடும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று இதுவரை உங்களுக்கு இருந்து வந்த குழப்பமான மனநிலையில் இருந்து மீள கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுற்றி இருப்பவர்களை அறியும் சந்தர்ப்பங்கள் அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதையும் தன்னம்பிக்கையுடன் சாதித்துக் காட்ட கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுக்கும் சூழ்நிலை நிலவும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்த உடன் எதுவும் கைக்கு வந்து விடாது. குடும்பத்தில் பெண்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதை தாமதப் படுத்துவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மன நிலை சீராக இருக்காது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உற்சாகம் அளிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு என்று எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களைக் காண இருக்கிறீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய நாளாக இருக்கும்.