இன்றைய ராசி பலன்கள் (20.06.2021)
மேஷம்
சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
ரிஷபம்
சுமாரான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எதிர்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
மிதுனம்
சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.
கடகம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். இலக்குகளை உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும்.
சிம்மம்
வளமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
கன்னி
சுமாரான நாளாக இருக்கும். மனதில் கவலை, பாதுகாப்பின்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்படலாம்.
துலாம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும்.
விருச்சிகம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
தனுசு
தாமதங்கள் காணப்படும். நிதானத்துடன் எதையும் அணுக வேண்டும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிப்பதைத் தவிர்க்க விட்டுக்கொடுப்பது நல்லது.
மகரம்
சாதகமான நாளாக இருக்காது. எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களின் அதீத உணர்ச்சி பெருக்கு காரணமாக குடும்பத்தில் இனிமையான சூழல் பாதிக்கப்படலாம்.
கும்பம்
எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளாக இருக்காது. எனவே, எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்கள்.
மீனம்
உற்சாகமான நாளாக இருக்கும். திறம்படச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.