இன்றைய ராசி பலன்கள் (18.08.2021)
மேஷம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இணைந்துள்ளதால் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை. தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின் பார்வை கிடைப்பதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளதால் இன்று நீங்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.