இன்றைய ராசி பலன்கள் (17.08.2021)
மேஷம்
சுமாரான நாளாக இருக்கும். எதிர்ப்புகள் தோன்றி அச்சுறுத்தலாம். மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். இது கவலையை அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள்.
ரிஷபம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்
சாதகமான நாளாக அமைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிய பயணம் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி காணப்படும்.
கடகம்
மனக் குழப்பம் காணப்படும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகத்தை வளர்த்துக்கொள்வது இதை எதிர்கொள்ள உதவும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.
சிம்மம்
சில தடைகள் காணப்பட்டாலும் பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இதனால் கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கன்னி
சாதகமான நாளாக அமையும். கடின உழைப்புக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்காது. யோசிக்காமல் பேச வேண்டாம். வார்த்தைகளால் வம்புகள் வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிதானமிழந்து காணப்படுவீர்கள். அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது.
விருச்சிகம்
ஓரளவுக்கு சுமாரான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்றைக்கு எடுக்க வேண்டாம். குடும்பத்தில் நட்புறவு பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.
தனுசு
சாதகமான நாளாக இருக்காது. கவலைகள் அதிகரிக்கும். கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.
மகரம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
கும்பம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். தடைகள் வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
மீனம்
மனதில் வீண் எண்ணங்கள் அதிகரிக்கும். நடப்பவை நல்லதுக்கு என்று லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலை உங்களை சோர்வடையச் செய்யும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காணப்படும்.