இன்றைய ராசி பலன்கள் (16.08.2021)
மேஷம்
சுமாரான நாளாக இருக்கும். எதிர்ப்புகள் தோன்றி அச்சுறுத்தலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவுகள் பாதிக்கப்படலாம்.
ரிஷபம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்
சாதகமான நாளாக அமைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். வேலை சூழல் சுமாராக இருக்கும். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி காணப்படும்.
கடகம்
மனக் குழப்பம் காணப்படும். மனக் குழப்பம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.
சிம்மம்
சில தடைகள் காணப்பட்டாலும் பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இதனால் கணவன் மனைவி இடையே உறவு நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கன்னி
சாதகமான நாளாக அமையும். கடின உழைப்புக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்காது. யோசிக்காமல் பேச வேண்டாம். வேலை சூழல் தடுமாற்றமும் ஏமாற்றமும் கொண்டதாக இருக்கும். குடும்பத்தில் நிதானமிழந்து காணப்படுவீர்கள்.
விருச்சிகம்
ஓரளவுக்கு சுமாரான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்றைக்கு எடுக்க வேண்டாம். வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நட்புறவு பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.
தனுசு
சாதகமான நாளாக இருக்காது. கவலைகள் அதிகரிக்கும். கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.
மகரம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
கும்பம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். தடைகள் வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மீனம்
மனதில் வீண் எண்ணங்கள் அதிகரிக்கும். நடப்பவை நல்லதுக்கு என்று லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று அமைதியாக இருப்பது நல்லது. அதிக வேலை உங்களை சோர்வடையச் செய்யும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காணப்படும்.