இன்றைய ராசி பலன்கள் (14.8.2021)
மேஷம்
சிறப்பான நாளாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம்
பரபரப்பான நாளாக இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.
மிதுனம்
சுமாரான நாளாக இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். குடும்பத்தில் வேறுபாடு காணப்படும். மற்றவர்களுடன் பேசும் போது கூடுதல் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
அனுகூலமான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் வந்து சேரும். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
சிம்மம்
அனுகூலமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே திருப்தியான மனநிலை காணப்படும்.
கன்னி
நம்பிக்கையின்மை நிலவும். இன்றைய நாளை எதிர்கொள்ள திணறுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். இதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் ஆரோக்கியமான உறவை பராமரிக்கலாம்.
துலாம்
கடினமான நாளாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இன்றைய நாளை அதன் போக்கில் விடுவது நல்லது. குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
இலக்குகளை நோக்கி பயணத்தைத் தொடர ஏற்ற நாள். வெற்றிகளைக் குவிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
மகரம்
நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதகமாக முடியும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
மீனம்
சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.